About

ni mud house

OUR MISSION

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் ஒவ்வொரு உயிரும் சுயசார்பு அடைய முடியும் என்ற உண்மையை உள்ளார்ந்து உணர்ந்து… இந்த நாகரீக வாழ்க்கையை விட ஆதி காட்டு வாழ்க்கையே மனநிறைவானது என்பதை உணர்த்த விரும்புகிறோம். நுகர்வு வெறியால் இந்த பூமியைப் பாழ்படுத்தி வரும் மனிதர்களில் ஒருவரையேனும் மீண்டும் இயற்கைக்குத் திரும்பச் செய்வதே Nature Indian-ன் முதன்மையான நோக்கம்.”

Deeply realizing the truth that every soul can achieve self-sufficiency in a life aligned with nature… we believe that the ancestral way of living was far more fulfilling than today’s modern civilization. In a world being ravaged by mindless consumerism, our mission at Nature Indian is to guide at least one person back to the embrace of Mother Nature..

Universe - பிரபஞ்சம்...

ஒற்றை தானியம் என்பது ஒரு பிரபஞ்சம்.
ஒளி, நீர், காற்று, வெப்பம்,வெளி,இருள் என இயற்கையின் அடிப்படைக் கூறுகள் அத்தனையும் ஒரு தானியத்த்துக்குள் திரள்கிறது.ஒன்றுமற்ற புள்ளியாக இருந்து, எல்லாம் நிறைந்ததாக ஒரு தானியங்கி இருப்படைதலுக்குப் பின்னணியில் ஒரு பெரும் பயணப்பாதை இருக்கிறது.

பேரியற்கையின் அறுந்து விடாத நீள்கண்ணி , சிறுவிதை வரைக்கும் தொடர்ந்து உயிர்வாழ்க்கையை பேரற்புதமாக மாற்றுகிறது.

இந்த உள்ளார்ந்த உண்மையை உணர்ந்துகொண்டால் உலகில் எவ்வுயிருமே போராலும் பசியாலும் பிணியாலும் துயரமடையாது.

பிரபஞ்சத்தின் லயத்தோடு ஒத்திசைந்து பூமிக்குள் மனித வாழ்வை தொடர்வதும் , அதற்க்கான நன்றியை செயலாக பரிணமிக்கச் செய்வதுமே ஞானத்தின் திறவுவாசல் –
இயற்கையோடு இணைந்திருப்போம்

A single grain is a universe in itself.
The fundamental elements of nature—light, water, air, heat, space, and darkness—all converge within a single grain. Behind its existence, evolving from a mere speck to a complete being, lies a magnificent journey.
The unbroken chain of the great Nature extends down to the tiny seed, transforming life into a grand miracle.
Once we realize this profound truth, no being in this world will suffer from war, hunger, or disease.
To continue human life on earth in harmony with the rhythm of the universe, and to express that gratitude through our actions, is the gateway to wisdom.
Let’s stay connected with Nature.

main pic (1)